WELCOME BAR

welcome to my page..வணக்கம் வருக வருகselamat datang...

My Creation poem's

1. கடவுள்


பருக நீரைத் தந்தேன்,
சுவாசிக்க காற்றைத் தந்தேன்,
உண்ண பயிரைத் தந்தேன்,
உடுத்த பருத்தித் தந்தேன்,
அணிய தங்கத்தைத் தந்தேன்,
நலமுடன் வாழ அறிவைத் தந்தேன்,
இவ்வளவு தந்து நீ வாழவில்லை என்றால்,
தவறு என்னது இல்லை உன்னது,
நீ யார் நான் யார் என்பதை முதலில் உணறு,
தானாக வாழ்வாய் மனிதனாய்...!!!!


-rooban.A-


2. சமுதாயமும் சமயமும்


நான் நீ அவன் இவன் அவர்கள் இவர்கள்
நாம் எல்லாமே ஒரே சமுதாயம்தான்,
மதம் என்னைப் பிரிக்கவில்லை,
கடவுள் என்னை விரட்டவில்லை,
நண்பா உணறு 
அவர்களும் நம்மவர்களே,
நீயும் அவர்களே, 
சமயத்தால் பிரிவை உண்டாக்காதே!
அரசியலால் சமுதாயத்தை அழிக்காதே!
சமயம் வேறு சமுதாயம் வேறு,
வர்ணத்தால் வேறுப்பட்டது நம்முடைய தவறல்ல,
வர்ணம் வேறாக இருந்தால்தான்,
ஆண்டவனுக்கே வித்தியாசம் தெரியும் என்பதனாலோ
மாற்றி அமைத்தான் நம்மவர்களை,
காரணம் காட்டாதே,
உலகமே நம் நண்பர்கள், 
உண்மை என்னவென்றால்,
நீ எவ்வாறு உலகத்தைக் காண்கிறாயோ,
அவ்வாறே உலகம் உன்னைக் காண்கிறது,
சமுதாயமாக வாழும் போது 
சமயவாதியாக இருக்காதே,
சமயவாதியாக இருக்கும் போது,
சமுதாயத்தைப் பற்றி பேசாதே!
எச்சரிக்கின்றேன் முடிவு செய்.
நீ சமுதாயவாதியா?
சமயவாதியா?
சமுதாயவாதி என்றால்,
அனைவரையும் ஏற்றுக் கொண்டு வாழ்,
சமயவாதி என்றால்,
சமுதாயத்துடன் உறவாடாதே,
உன்னால் குழப்பத்தை உண்டாக்கிச் செல்லாதே...!!!!


-rooban.A-


காதல்


நான் யாருக்குள் வருவேன்,
எப்பொழுது வருவேன்,
ஏன் வருவேன்,
என்று எனக்கே தெரியாது,
ஏனெனில் நான் ஒரு மாயாவதி,
எனக்கு ஜாதிப் பற்றி தெரியாது,
வர்ணம் பற்றி புரியாது,
குலம் தெரியாது,
சாத்திரம் அறியாது,
வயது கிடையாது,
வரம்பு நிற்காது,
அவனுக்கோ அவளுக்கோ வரும்போது,
தடுமாறிப் போவார்கள்,
கேட்டால் என் பெயர் சொல்லுவார்கள்,
ஆனால், உண்மையில் நான் அதுவல்ல,
அது அவனுடைய ஆர்மொன்களின் வேலை,
உடலில் ஏற்படும் மாற்றம்,
அவர்களிடையே நெருக்கம் ஏற்படும்போது,
நான் வருவேனாம், 
அவர்கள் சொல்லுகிறார்கள்,
வரலாம்,
அவர்கள் உடலோடு பேசும்போது,
நான் அங்கில்லை,
அது அவர்களின் உடலோடு ஏற்படும் ஈர்ப்பு,
அப்படியென்றால் நான் எப்பொழுது வருவேன்?
உன் கண்களில் ஆனந்த நீர் வருகிறதா?
உன் எண்ணங்களில் அவன்/அவள் இருக்கிறார்களா?
உன் எதிரே அவன்/ அவள் இல்லாமலும்,
அவன்/அவள் உருவம் தெரிகிறதா?
அவன்/அவளுடைய தலையை வருடி விட்டு,
நெற்றியில் முத்தமிடத் தோன்றுகிறதா?
கவலை ஒன்று அவளுக்கோ/ அவனுக்கோ நெருங்கும் போது,
அருகில் அமர்ந்து தோல் கொடுக்கிறாயா?
அம்மாவிற்கு அடுத்தோ அப்பாவிற்கு அடுத்தோ,
அவன்/அவள் என்கிறாயா?
அவன்/அவள் விதியைக் கூட மாற்றி,
அமைக்க முடியும் என்கிறாயா?
அவனை/அவளை முழுமையாகப் படிக்க
எண்ணுகிறாயா?
அவனுக்கு/அவளுக்கு பிடித்தது பிடிக்காதது
பார்த்து பார்த்து செய்கிறாயா?
அழுகின்ற நேரம் அவனை/அவளை 
மடியில் போட்டு ஆராரோ பாடுகிறாயா?
அவனை அவன் வழியில் விட்டு
அதனை இரசிக்கின்றாயா?
இரவில் உறங்கிக் கொண்டு இருக்கும் போது,
அவனை/அவளைப் பார்க்கத் தோன்றுகிறதா?
அவனை/அவளை கோபித்துக் கொண்டு,
விளையாடத் தோன்றுகிறதா?
உணவு உண்ணும் வேளையிலும் அவன்/அவள்,
 உண்டு விட்டாளா என கேள்வி தோன்றுகிறதா?
இறைவனைப் பார்த்தாளே உனக்கு என்று வேண்டாமல்,
அவனுக்கு/ அவளுக்கு என வேண்டுகிறாயா?
இதையும் தாண்டி,
நான் இறந்தாலும், 
அவன்/அவள் பல காலம்
வாழ வேண்டும் என எண்ணுகிறாயா?
அதுதான் நான்.

நண்பர்கள்

இறைவனைத் தேடி அலைகிறாயா?
உணர்வுகளுக்காக ஏங்குகிறாயா?
உறவுகளுக்காகக் காத்திருக்கிறாயா?
தனிமைக் கொள்ளுகிறதா?
கவலையின் போது துணையில்லையா?
அன்பை அறியவில்லையா?
அரவணைப்பை உணர்ந்ததுதில்லையா?
உலகின் சொர்க்கத்தைப் பார்கிறாயா?
காட்டுகிறேன் முதலில் நட்பைத் தேடு
தீமையும் நன்மையும் தானே வரும்..
நண்பர்களாய்....!!!!!!


-rooban.a-

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. smethng that came frm my mind..!!! its not like poems bt smethng tht i make it lk a poems..if gt wrng.please forgve this kid tht in progress of learning....

    ReplyDelete